Sunday, November 17, 2013

டிசம்பர் 20 முதல் பிரியாணிஆரம்பத்துடன் மோதி அழகுராஜா அய்யகோ ராஜா ஆனதை போல், பொங்கலுக்கு ஜில்லா, வீரத்துடன் பிரியாணியை மோதவிடத்தான் வேண்டுமா? கிறிஸ்மஸுக்கு தனியாக ரிலீஸ் செய்தால் என்ன.


ஞானவேல்ராஜா யோசித்துக் கொண்டிருக்கும் போதே கோச்சடையானின் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பு வெளியானது. அதற்குப் பிறகு ஏன் யோசித்துக் கொண்டிருக்கிறார்? அவசர அவசரமாக முடிவெடுத்து டிசம்பர் 20 பிரியாணி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள். டிசம்பர் 25 புதன்கிழமை கிறிஸ்மஸ். அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை - 20 ஆம் தேதி படம் ரிலீஸ்.


கோச்சடையானுக்கு இப்போதே 600 திரையரங்குகள் பொங்கலுக்கு ஒதுக்கிவிட்டதாக கூறுகிறார்கள். அதனால் வீரமும், ஜில்லாவும் ரிலீஸை தள்ளிப் போடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

Saturday, November 2, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம். - அஜீத் அதிரடி ஆரம்பம்


நடிகர் : அஜீத்

நடிகை : நயன்தாரா

இயக்குனர் : விஷ்ணுவர்தன்

இசை : யுவன்சங்கர் ராஜா

ஓளிப்பதிவு : ஓம்பிரகாஷ்

முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை. மும்பையில் முக்கியமான மூன்று இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு ஒன்று நடக்கிறது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் அஜீத்.

இதேவேளையில் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து முடித்த ஆர்யாவும், டிவி ரிப்போர்ட்டராக வேலை செய்யும் டாப்சியும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர்.

தன் காதலியை பிரிய முடியாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு சென்னையிலேயே வேலை செய்து வருகிறார் ஆர்யா.

மும்பையில் நாசகார வேலைகளுக்கு ஆர்யாவின் சாப்ட்வேர் மூளையை பயன்படுத்திக் கொள்ள அவரைத் திட்டம்போட்டு மும்பைக்கு வரவழைக்கிறார் அஜீத். அங்கு வரும் ஆர்யாவுக்கு அஜீத் ஒரு தீவிரவாதி என்பது தெரியவருகிறது.

இதனால் அஜீத்தின் நாசகார வேலைகளுக்கு துணைபோக மறுக்கிறார்.

ஆனால் அஜீத், ஆர்யாவின் காதலியான தாப்சியை கடத்தி வைத்துக் கொண்டு, அவளை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த வேலைகளை செய்யவைக்கிறார். இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துப் போகவேண்டும் என்று பலமுறை முயற்சிகள் எடுத்தும் தோற்றுப் போகிறார்.

ஒருகட்டத்தில் அவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் ஆர்யா அஜீத்தை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறார். காவல்துறையிடம் சிக்கிய அஜீத் என்ன ஆனார்? அவர் தீவிரவாதியாக உருவாக என்ன காரணம்? என்பதை ஆர்யாவுக்கு நயன்தாரா பிளாஸ்பேக்குடன் விவரிக்கிறார்.

படத்தில் ஸ்டைலிஷாக அஜீத் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் என்று சொல்லவேண்டும்.

மங்காத்தா கெட்டப்பில் வந்தாலும் மங்காத்தாவில் அஜீத்திடம் பார்த்த ஸ்டைலிஷ் இந்த படத்தில் இல்லை. இவரைவிட, இவர் நண்பராக வரும் ராணா அனைவரையும் ஈர்க்கிறார். முற்பாதியில் சீரியஷாக வரும் அஜீத், பிற்பாதியில் களைகட்டுகிறார். பிற்பாதியில் இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுக்க அஜீத் கூடவே வருகிறார். படத்தில் இவருக்கு செமத்தியான கதாபாத்திரம்தான். சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. ‘ராஜாராணி’ படத்தில் நடித்த ஆர்யாவுக்கு எதிர்மறையான கதாபாத்திரம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருடைய காதலியாக வரும் தாப்சி இந்த படத்தில் கொஞ்சம் அழகாகவே இருக்கிறார்.

இவர் செய்தி வாசிக்கும் காட்சியைத்தான் ரசிக்க முடியவில்லை.

காவல்துறை உயர் அதிகாரிகளாக வரும் அதுல் குல்கர்னியும், கிஷோரும் அவ்வப்போது ஒருசில சீன்களில் வந்து தலைகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள். உள்துறை மந்திரியாக வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் முகபாவனையும், நடிப்பும் மிரட்ட வைக்கிறது. அஜீத்துக்கு அடுத்தப்படியாக இவருடைய நடிப்பு ரொம்பவே ரசிக்க வைக்கிறது.

சுபாவின் திரைக்கதையில் விறுவிறுப்பு இருக்கிறது.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பின்னணியாக வைத்து படத்தை எடுத்ததற்காக இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு சலாம் போடலாம். பில்லா என்ற பெரிய படத்திற்கு பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படம் என்பதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் பரபரப்பான கதைக்களத்துடன் படமாக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

அஜீத் ரசிகர்களுக்கு உண்மையிலேயே கொண்டாட்டமான படம்தான் இது.

யுவன் இசையில் ‘அடடா ஆரம்பம்’ பாடல் ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும். மற்ற பாடல்கள் மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் யுவன் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் மும்பை மாநகரத்தை இன்னொரு கோணத்தில் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

மொத்தத்தில் ‘ஆரம்பம்’ அமர்க்களம்...!

Monday, April 22, 2013

என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர்: இயக்குனர் சேரன் வருத்தம்சென்னை: 

என் படத்தில் நடிக்க நடிகர்கள் மறுக்கின்றனர் என்று இயக்குனர் சேரன் வருத்தம் தெரிவித்துள்ளார். சேரன் ஜே.ஜே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யா மேனன், காமெடியனாக சந்தானம் நடிக்கின்றனர். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது சேரன் பேசியதாவது, ஆட்டோகிராப் படத்தில் நடிக்குமாறு பலரை அணுகினேன். அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்துவிட்டேன்.

 அதைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தேன். என்னதான் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. அதனால் தான் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை இயக்குகிறேன். நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பு தான் இந்த படம். 

தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்தை துவங்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை. அதனால் கதையை கேட்காமலேயே நிராகரித்துவிட்டனர். ஆட்டோகிராப் படத்தை ஆரம்பித்தபோது வந்தது போன்று கோபம் வந்தது. 

இந்நிலையில் சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்ததால் அவரிடம் கதை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். நித்யா மேனனும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படத்தை முடித்துவிட்டோம். என் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இது மாடர்னாக இருக்கும் என்றார்.

தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதல்- சல்மான் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம்!மும்பை: 

சல்மான் கானின் மென்டல் படஷூட்டிங்கில் பெப்சி அமைப்பின் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மென்டல் படத்துக்கு ரூ 25 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் சல்மானின் தம்பி சோஹைல் கான்.

 மென்டல் படத்தில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டி பெப்சி அமைப்பினர் படப்பிடிப்பைப் புறக்கணித்தனர். 

இதையடுத்து இரு பாலிவுட்டும் கோலிவுட்டும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி பெப்சி நிர்வாகிகள் மும்பை சென்று நடத்திய பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. இதுபற்றி மென்டல் தயாரிப்பாளர் சோஹைல் கான் கூறுகையில், "தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்தான் இப்படத்துக்கு நியமிக்கப்பட்டார்.

 அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கான்பெடரேஷன் விதிப்படி 70 சதவீதம் ஸ்டன்ட் கலைஞர்களை அந்த அமைப்பிலிருந்து பயன்படுத்த வேண்டும், 30 சதவீதம் பிற கலைஞர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெப்சியோ தங்கள் அமைப்பிலிருந்து 50 சதவீதம் பேரைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, ஷூட்டிங்கைப் புறக்கணித்துவிட்டனர். 

இதுதான் பிரச்சினை...," என்றார். அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் தர்மேஷ் திவாரி கூறுகையில், "மார்ச் 2013 ல் செய்த ஒப்பந்தப் படி நடக்கவில்லை பெப்சி. திரும்ப திரும்ப 50 சதவீத கலைஞர்களை பெப்சியிலிருந்தே எடுக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்," என்றார். இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை தங்கள் படத்திலிருந்து நீக்கி விட்டு பாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்களை நியமிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

Sunday, April 21, 2013

வேலூர் பெண்ணை மணக்கும் சிம்பு?


சென்னை: 

சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்த்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிம்பு வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காதல் ஜோடியாக வலம் வந்து பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். 

சிம்பு அந்த முன்னணி நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வரும். இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் முடிவு செய்தார். பெண் பார்க்கும் படலமும் வேகமாக நடந்து வருகிறது. 

சிம்புவுக்கு வேலூரில் ஒரு பெண்ணை பார்த்தார்களாம். பெண் பிடித்துப் போக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெண் ஓகே ஆனால் இந்த ஆண்டே திருமணம் தானாம். சிம்பு முகத்தில் இப்பொழுதே புதுமாப்பிள்ளை களை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

சேட்டை யுகே வசூல் நிலவரம்


சேட்டை சென்னையில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. உதயம், கௌரவம் படங்களின் ரிலீஸ் அதன் வண்ல் வேகத்துக்கு சின்ன தடை போட்டிருக்கிறது எனலாம். 

யுகேயில் சேட்டையின் வசூல் இரண்டாவது வாரத்திலேயே கீழிறங்கிவிட்டது.ஏப்ரல் 14 முதல் 16 வரை - அதாவது வார இறுதியில் 15 திரையிடல்களில் 4,359 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. ஏப்ரல் 16 வரை சேட்டையின் மொத்த வசூல் 35,671 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 29.9 லட்சங்கள்.

யுஎஸ் ஸில் சேட்டை ஏப்ரல் 14 முதல் 16 வரை பதினைந்து திரையிடல்களில் 15,245 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. ஏப்ரல் 16 வரை சேட்டையின் யுஎஸ் வண்ல் 76,665 அமெரிக்க டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 41.81 லட்சங்கள்.

ஆர்யாவின் படத்துக்கு இது அதிகமான வசூல்தான்.

Thursday, April 18, 2013

புனே சர்ச்சில் ஆர்யா- நயன்தாராவுக்கு

வாழ்க்கையில் நயன்தாரா - ஆர்யா திருமணம் விரைவில் நடக்கப் போகிறது என பத்திரிகைகள் ஆரூடம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், புனே சர்ச்சில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இது ராஜா ராணி படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சிக்காக!
அட்லீ குமார் இயக்கும் இந்தப் படத்தில் நயனும் ஆர்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் வருகிறார்.
இந்தப் படத்தில் நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை புனேயில் உள்ள தேவாலயத்தில் எடுக்க முடிவு செய்த இயக்குநர், அதற்காக புனே செயின்ட் மேரீஸ் சர்ச்சில் அனுமதி பெற்றார்.
நாட்டில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயங்களில் மிகப் பழமையானது இதுதான். ஒரு சர்ச்சில் நடக்கும் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் முறைப்படி நடக்குமோ, அதில் ஒன்றுவிடாமல் இருவருக்கும் நடத்தப்பட்டது.
ஆர்யா கோட் சூட் அணிந்திருந்தார். நயன்தாரா பாரம்பரிய வெள்ளை கவுன் அணிந்து வந்தார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இந்த திருமணக் காட்சி படமாக்கப்பட்டது.
ஆனால் அது சினிமாக்காட்சி போலவே தெரியவில்லை. நிஜ திருமணம் போலவே இருந்தது, என்கிறார்கள் செட்டிலிருந்த ராஜா ராணி குழுவினர்.
அப்படித்தான் நடந்துவிட்டுப் போகட்டுமே!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களுக்கு பிடித்தவை